(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 11, 2017

நாளை பிளஸ்-2 தேர்வு முடிவுகள, வெளியிடும் இணையதளங்கள் விபரம்!!

No comments :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. இந்த ரிசல்ட்டை எந்தெந்த இணையதளத்தில் பார்க்கலாம் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு முடிவை அனைவரும் இந்த 3 இணையதளங்கள் மூலமாக பார்க்கலாம்.


2-
ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் 15-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment