(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 9, 2017

அரியமானுக்கு பஸ் வசதி கோரும் சுற்றுலா வாசிகள்!!

No comments :

ராமேஸ்வரம் சுற்றுலாதலமாக உள்ளதால்ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தற்போது கோடை விடுமுறை காரணமாக உச்சிப்புளி அருகேயுள்ள அரியமான் கடற்கரைக்கு வேன்களிலும் வாடகை கார்களிலும் சென்று கடற்கரையில் குளித்து இளைப்பாறி செல்கின்றனர்.
இதனால் தினமும் கடற்கரை கோலாகலமாக உள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர். இதுதவிர படகு சவாரி செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.




இந்நிலையில் உச்சிப்புளி முதல் ராமேஸ்வரம் வரை குறைந்த அளவிலான டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அரியமான் கடற்கரைக்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ தூரம் செல்ல வேண்டும். டவுன் பஸ்களும் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அப்பகுதியில் 3 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையும் தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. பயணிகளின் நலன் கருதி கோடை விடுமுறையில் மட்டும் காலை, மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment