Tuesday, June 20, 2017
என்று கிடைக்கும் திருமண உதவித்தொகை, ஏக்கத்தில் விண்ணப்பதாரர்கள்!!
திருமணமாகி குழந்தைகள் பிறந்த நிலையிலும்
விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை கிடைக்காததால், ஏழை
பெற்றோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் ஏழை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு திருமண
உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள்
பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக இருந்தால் ரூ 25 ஆயிரம், அரை
பவுன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.
பட்டதாரி பெண்களுக்கு ரூ 50 ஆயிரம்
, அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற
திருமண நாளுக்கு ஒரு நாள் முன்னதாக பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய
வேண்டும்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் உட்பட பல்வேறு
மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளிகளுக்கு குழந்தையும்
பிறந்துவிட்டது. இத்திட்டத்தில் வரும் உதவித்தொகையை நம்பி கடன் வாங்கிய பயனாளிகள்
ஒரு ஆண்டிற்கும் மேல் ஆகியும் உதவி தொகை கிடைக்காததால் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
இது குறித்து பயனாளி ஒருவர் கூறுகையில், திருமண
உதவி தொகைக்கு விண்ணப்பித்து 16 மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு குழந்தை
பிறந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் உதவி தொகை குறித்து
அலுவலகத்திற்கு சென்று கேட்டால் அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளது என்கின்றனர், என்றார்.
இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஒருவர்
கூறுகையில்,
அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளதால் மாவட்டத்தில் பல ஆயிரம்
மனுக்கள் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேங்கி உள்ளன. சுழற்சி முறையில் உதவி தொகை
வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் பணம்
கிடைத்துவிடும்,
என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment