(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 21, 2017

அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பணி வாய்ப்பு!!

No comments :
அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்   தகுதியும் விருப்பமுடையோர் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

1058 காலிப்பணியிடங்கள் கொண்ட விரிவுரையாளர் பணி காலியாக உள்ளது .
விரிவுரையாளர் சம்பளம் ரூபாய் 15000- 39100
கல்வி தர ஊதியம் ரூபாய் 5900 ஆகும் .

விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .

ஆன்லைன் விண்ணபிக்க ஜூன் 17 முதல் தொடங்குகிறது மேலும் ஜூலை 7ஆம் தேதி 11.59 மணிபிற்பகல் வரை விண்ணப்பிக்கலாம் .

ஆகஸ்ட் 13 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க தொடங்குங்கள்.


பொறியியல் பாட விரிவுரையாளர் பணிக்கு இளங்கலை பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடத்தில் விரிவுரையாளர் பணிக்கு பொறியியல் அல்லாத மற்ற பாடத்தில் முதுகலை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மாற்றுதிறனாளிகள் ரூபாய் 300 மட்டும் செலுத்தினால் போதுமானது ஆகும்.

ஒய்வு பெறும் வயது 58 ஆகும் .


விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தமிழக அரசின் ஆசிரியதேர்வு இணையத்தினை பயன்படுத்துங்கள்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment