(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 20, 2017

ராமநாதபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆர்கானிக் சேலைகள்!!

No comments :
ராமநாதபுரம் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் அனைத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சேலைகள் தீபாவளி பண்டிகைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கைத்தறி ரகங்களின் விற்பனை அதிகரிக்கவும், நெசவாளர்கள் பயன் பெறவும், பண்டிகை காலங்களில் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் பட்டு, பருத்தி ரகங்களுக்கு வழங்கப்படுகிறது. பல வித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுசேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் பல வண்ணங்களில், புதிய டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயண உரங்கள் இல்லாமல், இயற்கையில் விளைவிக்கப்பட்ட பருத்தியில் இருந்து, இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி, செட்டிநாடு, சுங்கிடி சேலைகள் விற்பனைக்கு உள்ளன. ஆடவர்களை கவரும் விதமாக லினன், பருத்தி சட்டைகள், பல வண்ணங்களில் வந்துள்ளன.


தங்கமழை திட்டத்தில் செப்., 15 முதல் 2018 ஜன., 31 ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணி வாங்குபவர்களுக்கு கூப்பன் வழங்கப்படும். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாடிக்கையாளர்களில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். இந்த சிறப்பு விற்பனையை கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார்.

நிர்வாககுழு உறுப்பினர்கள் வி.ஜி. அய்யான், எம்.எம்.சுந்தரி, மண்டல முதுநிலை மேலாளர் எம், சண்முகசுந்தரம், மேலாளர் எம்.பழனிச்சாமி, துணை மண்டல மேலாளர் பி.ஸ்டாலின், விற்பனையாளர் பாண்டியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர் .


கடந்த ஆண்டு விற்பனை 81.63 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்தாண்டு 1.03 கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment