வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, September 9, 2017

ராமநாதபுரத்தில் ஏர் கண்டிஷனர் மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் இலவச பயிற்சி!!

No comments :
இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் செப் 11ம் தேதி முதல், ஏர் கண்டிஷனர் மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

பயிற்சி பெற விரும்புவோர், 18 வயதிலிருந்து, 35 வயதுக்கு குறைவாகவும், குறைந்தபட்சம், 8ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

30 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் பயிற்சியானது காலை, 10 மணி முதல், மாலை, 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்குவதோடு, பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, 04567-221612 மற்றும் 9994151700 என்ற ஃபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment