(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 11, 2017

வீதிகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை!!

No comments :
வீதிகள், நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

வீடு தேடி வரும் துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை  தரம் பிரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதிமுறைகளை மீறி கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள், நீர்நிலைகளில் கொட்டுபவர்கள், வாறுகாலில் கொட்டுபவர்கள் மீது பொதுசுகாதார சட்டம் 1939 (மாநில சட்டம் 1939) இந்திய தண்டனை சட்டம் (மைய சட்டம் 45/1860) பிரிவு 269ன் கீழ் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்க உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என்றார்.

இந்த முயற்சி வெற்றி பெறுமா?
பிற ஊராட்சிகள்/ பேரூராட்சிகள்/ நகராட்சிகள் இந்த முறையை பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


செய்தி: திரு. தாஹிர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment