Monday, October 23, 2017
ராமநாதபுர மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம், ஏராளமான அபராதங்கள்!!
ராமநாதபுரம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில்
தீவிரம், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்
பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள்
ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும், டெங்கு
பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. தினமும் அதிகாரிகள் அடங்கி சுகாதாரக்குழுக்கள் அதிரடி சோதனையில்
ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக
வைத்துக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு,வசூலிக்கப்பட்டு
வருகிறது.
நேற்று காலை கலெக்டர் எஸ்.நடராஜன், ஆர்.டி.ஓ., பேபி, நகராட்சி
கமிஷனர் நடராஜன்,
சுகாதார அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர்கள் ஹரிதாஸ், மதன்குமார், ஜெகதீஸ்
ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 வது வார்டு பகுதியில்
சிவன் சன்னிதி தெருவில் சுகாதாரமற்ற முறையில் இருந்த மூன்று வீடுகளுக்கு தலா 3 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்: தண்ணீர் டேங்கர் லாரிகளையும் சோதனை செய்தனர்.
இதில் டேங்கரை முழுமையாக சுத்தம் செய்யாமல் கொசுப்புழுக்களுடன் தண்ணீர் சப்ளை
செய்த லாரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு டேங்கர்
லாரிக்கு,
50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் பின்னர்
முதல் வார்டு பகுதியில் ஆய்வு நடத்தினர்.
இப்பகுதியில் கழிவு நீரை தெருவில் விட்ட வீட்டின்
உரிமையாளருக்கு குற்ற நடைமுறைச்சசட்டம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பின் அதிகாரிகள் குழு தொடர்ந்து தங்களது ஆய்வுகளை
நடத்தியது.எச்சரிக்கை: இது போன்று சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்காதவர்கள்
மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு அலுவலகங்கள், தனியார்
நிறுவனங்கள் உட்பட அனைத்துப்பகுதியிலும் ஆய்வு தொடரும். சுகாதாரமற்ற முறையில்
வைத்திருந்தால்,
நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம்
விதிக்கப்படும்,
என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment