(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 10, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல், குவியும் நோயாளிகள், வசதிகலில்லா மருத்துவமனை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல்களினால் அதிகளவில் நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்கிராமங்களில் தேங்கி கிடக்கும் நீர்குப்பைகளால் கொசு உற்பத்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொசு தொல்லையால் பெரியார் நகர்கொத்ததெருவசந்தம் நகர்லெட்சுமிபுரம் ஊரணிபாம்பூரணிசக்கரக்கோட்டைநேரு நகர்இபுராகிம் சேட் நகர்பட்டினம்காத்தான்டி.பிளாக் வீட்டு வசதி குடியிருப்புஓம்சக்தி நகர்பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர் பற்றாக்குறையினால் நகர்கிராமப்பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மந்தம் ஏற்பட்டு வருகிறது. ஓம்சக்தி நகர் சந்திரன் கூறுகையில்நகரின் பல இடங்களில் தேங்கி கிடக்கும் மழை நீரினால் கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. கொசுக்கடியால் இரவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
 மாவட்ட சுகாதார துறையினர் கொசு ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பிற்காக 27 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு பணிக்கு வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது அபராதம் விதிப்பது மட்டுமில்லாமல் வழக்குப்பதிந்து 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் உச்சிப்புளி, மண்டபம், சத்திரக்குடி, ஆர்எஸ் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் உள்ள வார்டுகளில் படுக்கை வசதி இல்லாததால் குளுக்கோஸ், ரத்தம் ஏற்றுதல் போன்றவற்றிற்கு மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகளை மருத்துவமனை வரண்டாவிலும், சேதமடைந்த பெட்டுகளிலும் வைத்து சிகிக்சை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த கழிப்பறை வசதிகள் இல்லை. இருக்கும் கழிப்பறைகளும் இடிந்தும், சுகாதாரமின்றியும் மோசமாக உள்ளன. இங்கு பணியாற்றும் நர்சுகள், ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு என்று தனியாக கழிப்பறைகள் கிடையாது. அவர்களும் நோயாளிகளின் கழிப்பறைக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பார்வையாளர்களாக வரும் நூற்று கணக்கானோர் கழிப்பறைகள் இன்றி அவதிப்படுகின்றனர். பரிசோதனை கூடத்திற்கு வரும் நோயாளிகளுக்கு சிறுநீர் பரிசோதனை செய்ய கழிப்பறைகள் இல்லாததால் ஆண் மற்றும் பெண்கள் ஒரே கழிப்பறைக்கு செல்லும் நிலை உள்ளது.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment