வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Tuesday, October 10, 2017

ராமநாதபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற அலைக்கழிப்பு!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற அலைக்கழிப்பு செய்யும் அதிகாரிகள். சர்வர் பழுது காரணமாக திருத்தம் கூட செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 1.5 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர் .

இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் தற்போது அனைத்திற்கும் அவசியமாக தேவைப்படுகிறது. மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நகராட்சிக்கு குழந்தைகள் பிறப்பு குறித்து அறிக்கைஅனுப்பப்பட்டு வருகிறது. இது தவிர அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் குறித்த விபரங்களும் வாரம் தோறும் நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சியில் இறப்பு குறித்த விபரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.பொது மக்கள் பிறப்பு, இறப்பு குறித்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்த பின் நகராட்சிக்கு உரிய கட்டணத்தை செலுத்தினால், ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பம் செய்து, கட்டணம் செலுத்திய பின் சான்றிதழ் கேட்க சென்றால், மக்களை அலைக்கழிப்பு செய்கின்றனர்.

சர்வர் பழுது: இந்த சான்றிதழ் அனைத்தும் இணையதளம் மூலம் பதிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. எல்லாம் சரியாக இருந்தால், சர்வர் பழுது, இரு நாட்களாகவேலை செய்யவில்லை, என அலைக்
கழிப்பு செய்கின்றனர்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை உரிய காலத்தில், முறையாக மக்களுக்கு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment