(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 20, 2017

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களான
நிலம் மேம்பாட்டு திட்டம்,
நிலம் வாங்குதல் (பெண்கள் மட்டும்),
தொழில் முனைவோர் திட்டங்கள்,
பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், மருத்துவ மையம்,
மருந்தியல்.
கண் கண்ணாடியகம்,
முடநீக்கு மையம்,
ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், (எம்.பி.பி.எஸ். பி.எஸ்.எம்.எஸ், பி.டி.எஸ், பி.பார்ம், டிபார்ம், லேப் டெக்னீசியன், பாரா மெடிக்கல் பிரிவு படித்திருக்கவேண்டும்)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான
சுழல்நிதி,
பொருளாதார கடனுதவி,
மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி,
மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி,
தொழில் தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி



ஆகிய பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும்.
18 முதல் 65 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சுயவேலை வாய்ப்பு திட்டத்திற்கு மட்டும் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விபரங்களுடன் குடும்ப அட்டை,  இருப்பிட சான்று, சாதிச்சான்று, வருமான சான்று, கல்வி தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்று, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை,  மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் டின் நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்ட அறிக்கை மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம், மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விபரங்களை பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக
மாவட்ட மேலாளர்,
தாட்கோ அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment