(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 8, 2017

இறைச்சி வியாபாரிகள் ஆடுகளை வெட்டுவதற்கு அடிச்சாலைக்கு கொண்டு வந்து மருத்துவரிடம் கான்பிக்க வேண்டும்!!

No comments :
பொதுவாக ஆடுகளை வெட்டுவதற்கு முன்பாக இறைச்சிக்கடை வியாபாரிகள் நகர் பகுதியில் உள்ள ஆடு அடிச்சாலைக்கு கொண்டு வந்து மருத்துவரிடம் கான்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் ஆடுகளை வெட்ட வேண்டும். நோய் தாக்கிய ஆடுகளை அங்கு வெட்டுவதற்கு அனுமதி கிடையாது. வெட்டப்பட்ட ஆடுகளுக்கு நகராட்சியின் சீல் வைக்கப்படும்.

இந்நிலையில் தற்போது ராமநாதபுர ஆடு அடிச்சாலை பராமரிப்பின்றி அடைக்கப்பட்ட நிலையில் உள்ளதாக கூறி கடைக்காரர்கள் தங்களது இடத்திலேயே ஆடுகளை வெட்டிக்கொள்கின்றனர். இதனால் இறந்துபோன, நோய்வாய் பட்ட ஆடுகளையும் கலந்து இறைச்சி கடைக்காரர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. நோய்பட்ட ஆடுகளை பொதுமக்கள் சாப்பிடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்து இறைச்சிக்கடைகாரர்களை அவர்களது இடத்தில் வெட்ட அனுமதி அளிக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நகராட்சி அதிகாரிகள் ஆடு அடிச்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும். அங்கு வந்தே ஆடுகளை வெட்ட இறைச்சிக் கடைகாரர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக அங்குள்ள மோட்டார் வேலை செய்யாததால் தண்ணீர் சேமித்து வைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி இறைச்சி கடைக்காரர்கள் ஆடு அடிச்சாலைக்கு வர மறுக்கின்றனர்.

ஆடு அடிச்சாலையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் வாரத்தில் அனுமதியின்றி பொது இடங்களில் ஆடுகள் வெட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று கூறினர்.


செய்தி: திரு. தாஹிர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment