Friday, December 8, 2017
வாக்காளர் அட்டை திருத்தப்பணி டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு!!
ராமநாதபுரம், டிச.7: ஜன.1, 2018-ஐ தகுதி நாளாக கொண்டு நடந்த வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தற்போது டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையரகத்தின் அறிவுரைகளின்படி ஜன.1, 2018-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் கடந்த அக்.3ல் துவங்கி நவ.30 வரை நடந்தது. தற்போது இப்பணி டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இக்காலத்திற்குள் சிறப்பு சரி பார்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுவரை விடுபட்ட மற்றும் புதிய தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, தகுதியான வாக்காளராக உள்ள நபர்களின் விபரம் சேகரிப்பது, நிரந்தரமாக வெளியேறிய மற்றும் இறந்த வாக்காளர்களின் விபரம் சேகரிப்பது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கொடுக்கப்பட்ட படிவம் 8-ஐ பெற்று நடவடிக்கை எடுப்பது, அலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரியை குடும்ப வாரியாக பெறுவது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் விபரம் பெறப்படுவது,
ஒவ்வொரு குடும்பத்திற்கான அட்சயரேகை, தீர்க்கரேகை விபரங்கள் அலைபேசி செயலி அல்லது குறுஞ்செய்தி உதவியோடு சேகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும். இவைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் இந்திய தேர்தல் ஆணையரகத்தால் கொடுக்கப்பட்ட பட்டியல் முறையில் பெறப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு சரிபார்ப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment