Thursday, January 12, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை சரிபார்க்கும் பணியில் மாணவர்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை
கல்லூரி மாணவ,
மாணவியர் மூலம் பொது விநியோகத் திட்ட இணைய தளத்தில்
சரிபார்க்கும் பணியை புதன்கிழமை ஆட்சியர் எஸ்.நடராஜன் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1.11.2016 முதல் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் ஒவ்வொரு வீடாக சென்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ, மாணவியரைக் கொண்டு பொது விநியோகத் திட்ட இணைய பக்கத்தில் தகவல் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
இப்பணிகளில் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி,
முகம்மது சதக் பொறியியல் கல்லூரி,
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி,
சதக் பாலிடெக்னிக் கல்லூரி
ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் எஸ்.நடராஜன் தேவிபட்டிணம், புல்லங்குடி ஆகிய
பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின்
விலையில்லா பரிசுப் பொருள்கள் வழங்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் ராமநாதபுரம் கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன், மாவட்ட வழங்கல் அலுவலர் மு.மதியழகன், வட்ட வழங்கல் அலுவலர்கள் கே.ஏ.தமீம்ராஜா (கீழக்கரை)சாந்தி (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Subscribe to:
Posts
(
Atom
)