முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 18, 2017

ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் போராட்டம்!!

No comments :
  
கடந்த இருவாரங்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு கரகோஷங்களும் அறவழிப்போராட்டங்களும் வலுத்து வருகின்றது.

நேற்று முதல் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தால் அரசாங்கமும் திகைத்துப் போய் நிற்கின்றனர்.


இன்று காலையில் கீழக்கரையில் உள்ள கல்லூரி மாணவர்களும் காலை முதலே வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராடும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். 

இதற்கிடையில் அரசு அதிகாரிகளும் காவல் துறையும் மாணவர்களை போராடட்த்தை கைவிட்டு கலைந்து போக வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.



இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களின் களைப்பை போக்கும் வண்ணமும், ஆதரிக்கும் வண்ணமும் கீழக்கரையை சார்ந்த பல சமூக அமைப்புகள் தண்ணீர் மற்றும் குடிநீர் பானங்களை வழங்கி வருகிறார்கள்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக 40 பேர் மீது வழக்கு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக 40 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி சிலை எடுத்த அய்யனார் கோயில் அருகே தடையை மீறி கடந்த 15ஆம் தேதி எருது கட்டு நடத்தியதாக அக்கிராமத்தை சேர்ந்த 15 பேர் மீது கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போல கடந்த 16 ஆம் தேதி காஞ்சிரங்குடியில் கண்ணன் கோயில் அருகில் தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக ராமநாதபுரம் மாவட்ட எருதுகட்டு நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஆதித்தன் உள்பட 25 பேர் மீதும் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டம் முழுதும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!!

No comments :

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நகர் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ராமநாதபுரம் நகர் அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் எஸ்.அங்குச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செ.முருகேசன்,ஜி.முனியசாமி,மாவட்ட மகளிர் அணியின் செயலாளர் கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிர்வாகிகள் பலரும் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர்தூவி, மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல், நகரில் உள்ள 33 வார்டுகளிலும் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் இளைஞர் பாசறையின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.சி.வரதன்,நகர் துணை செயலாளர் ஆரிப்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் கட்சியின் நகர் செயலாளர் வீ.ராஜேந்திரன் தலைமையிலும்
,ராமேசுவரத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் அ.அர்ச்சுணன் மற்றும் நகர் செயலாளர் பெருமாள் ஆகியோர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சுல்தான், அம்மா பேரவை செயலாளர் சரவண பாலாஜி ஆகியோர் முன்னிலையில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


இதில் முன்னாள் நகர் செயலாளர் இம்பாலா உசேன்,நகர் துணைச்செயலாளர் குமரன்,மாணவரணி செயலாளர் சுரேஷ்,மாணவரணி தலைவர்ஆதித்தன்,இளைஞர் பாசறை நிர்வாகி சிவா உட்பட ஏராளமான அஇஅதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர்:  முதுகுளத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன்,மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் மலைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாயல்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  ஒன்றியச் செயலாளர் அந்தோனிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.செய்யது காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஒன்றியச் செயலாளர் என்.கே.முனியசாமிபாண்டியன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கமுதி பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. காளிமுத்து தலைமை வகித்தார். நகர் செயலாளர் வி.கே.சி.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

படங்கள்: கீழக்கரை அதிமுக

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)