முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 2, 2017

ராமநாதபுரத்தில் வரும் 7 ஆம் தடகளப்போட்டிகள் - கலெக்டர்!!

No comments :
கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் மாவட்டப் பிரிவின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே உலகத் திறனாளர்களை கண்டறிய தடகளப்போட்டிகள் வரும் 7 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் 8 ஆம் தேதி காலை பரமக்குடி மினி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.


100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகள் 6,7,8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வகுப்பு வாரியாக நடத்தப்படும். ஒரு போட்டியாளர் 3 போட்டிகளுக்கு மேல் கலந்து கொள்ள இயலாது. பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது.


ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 நிலைகளில் வெற்றி பெறும் மாணவ,மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரு இடங்களை பெறுபவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பிப்-4 ம் தேதி திருச்சி MIET கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
பிப்-4 ம் தேதி திருச்சி MIET கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)