Thursday, February 9, 2017
தபால் நிலையங்களில் போலீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்கள், பிப் 22க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!!
ராமநாதபுரம் மாவட்ட தபால் நிலையங்களில் போலீஸ் தேர்வுக்கான 17 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர்
தேர்வு குழுமத்தால் போலீஸ்,
சிறை, தீயணைப்பு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் தபால் அலுவலகங்களில் ஜன.,23 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், திருவாடானை, கமுதி, கடலாடி, முதுகுளத்துõர், பேரையூர்
தபால் அலுவலகங்களில் ரூ.30
செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
விற்பனை துவங்கிய
நாளில் இருந்து இது வரை 17,000
விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணம், விண்ணப்பங்களை
விரைவு தபால் மூலம் அனுப்ப அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவு தபாலில் முகவரியுடன் அலைபேசி எண்ணை எழுதி, விண்ணப்பம்
வினியோகித்த தகவலை எஸ்.எம்.எஸ்., மூலம் பெறலாம்.
விண்ணப்பங்கள்
அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்.,22 என்பதால் அதற்கு முன்பாக
விண்ணப்பங்கள் பெற வேண்டும், என தபால் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல் செயல்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு சீல்!!
ராமநாதபுரத்தில் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல்
செயல்பட்ட நான்கு குடிநீர் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை
பயன்படுத்தி தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிறுவனங்கள் புற்றீசல்
போல் பெருகிவருகிறது. இவற்றில் பெரும்பாலானவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்
உத்தரவின்படி ஐ.எஸ்.ஐ.,
தரச்சான்று பெறாமல் இயங்குகின்றன.
மாவட்டத்தில் உள்ள 23 சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் வழங்கும் நிலையங்களில் ஏழு மட்டுமே ஐ.எஸ்.ஐ., தரச்சான்று
பெற்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தர பரிசோதனை நடக்கின்றன. மற்ற 16 குடிநீர் நிறுவனங்களும் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகின்றன.
இந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட உணவு
பாதுகாப்புத்துறை சார்பில் 2016 ஜூன் 8 மற்றும்
அக்.,6 ஆகிய தேதிகளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், இதன்
உரிமையாளர்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து பட்டணம்காத்தான் ஊராட்சி முனியசாமிநகர்(வடக்கு)
பகுதியில் செயல்பட்ட 'அல்ட்ரா பியூர் மினரல் வாட்டர்' நிறுவனத்தை ஜெகதீஸ்
சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தரச்சான்று பெறாமல் செயல்பட்ட இந்த
நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். உரிமையாளர் முகமது அயூப்கானுக்கு நோட்டீஸ்
வழங்கினர்.
இதே போல் தரச்சான்று பெறாமல் கழுகூரணியில் செயல்பட்ட
வான்மழை, மீனா அக்வா மற்றும் சங்கந்தியான்வலசையில் உள்ள டி.ஆர்.எஸ்.அக்வா ஆகிய குடிநீர்
தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர்.
இதுகுறித்து ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறுகையில்,
' தரச்சான்று பெறாத குடிநீர் நிறுவனங்களை பூட்டி சில் வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 12 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களும் ஓரிரு
நாட்களில் பூட்டி சீல்வைக்கப்படும்.இந்த நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ., சான்று
பெற விண்ணப்பித்தால்,
இதற்கான குழுவினர் ஆய்வுக்கு பின்னரே திறப்பதற்கு
அனுமதியளிக்கப்படும்,
என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)