முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 23, 2017

பரமக்குடியில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் பள்ளம்!!

No comments :
பரமக்குடியில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 36ஆவது வார்டு திருவள்ளுவர் நகர் தெற்கு பள்ளிவாசல் செல்லும் சாலையில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக தார்சாலை போடப்பட்டது. அப்போது சாலையின் இருபுறமும் உள்ள வாருகால் மற்றும் கழிவுநீரை கடத்துவதற்கான கல்வெட்டையும் சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில் அவ்வழியாக கட்டுமான பொருள்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்களால் சாலை முற்றிலும் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

ஆகவே, இச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தனுஷ்கொடியில் மீண்டும் தபால் நிலையம்!!

No comments :
ராமேசுவரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. கடந்த 1964-ம் ஏற்பட்ட புயலால் தனுஷ்கொடி நகரமே முழுமையாக அழிந்து போனது. இந்த புயலில் அங்கிருந்த தபால் நிலைய கட்டிடமும் முழுமையாக இடிந்து மண்ணோடு மண்ணாக காட்சியளித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன் தனுஷ்கோடி பகுதியை தபால் துறை அதிகாரிகளுடன் பார்வையிட்ட முதன்மை தலைவர் சார்லஸ் நிக்கோலஸ் மீனவ மக்களின் வசதிக்காக தனுஷ்கோடியில் கிளை தபால்நிலையம் புதிதாக திறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நேற்று புதிய கிளை தபால் நிலையம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு தபால் துறை மாவட்ட உதவி கண்காணிப்பாளர்கள் துளசிதாஸ், விஜயகோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கிளை தபால் நிலையத்தை மாவட்ட தலைமை கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங், தனுஷ்கோடி கிராம தலைவர் செல்லத்துரை, ரோட்டரி முன்னாள் தலைவர் சுடலை, ஓய்வு பெற்ற தபால்காரர் குருசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 


விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கிருஷ்ணன், ராமேசுவரம் தபால் நிலையஅதிகாரி நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த புதிய கிளை தபால் நிலையத்தில் மீனவ பெண்கள் பலர் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று சேமிப்புகணக்கு தொடங்கினர்.


பின்னர் தலைமை கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியில் மீனவ மக்கள் வசதிக்காக புதிய கிளை தபால் நிலையம் திறக்கப்பட்டுஉள்ளது. இங்கு தபால் சேவை, மணியார்டர், சேமிப்பு வங்கி சேவை, காப்பீடு சேவை உள்ளிட்ட அனைத்து தபால் சேவைகளும் வழங்கப்படும். ராமநாதபுரம் கோட்டத்தில் தனுஷ்கோடியில் திறக்கப்பட்டுள்ள தபால் நிலையம் 247-வது கிளையாகும். ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள 57 தபால் நிலையங்களில் 53 ஒருங்கிணைந்த வங்கி சேவை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இதன் மூலம் எந்த ஒரு தபால் நிலையத்திலும் நடப்பில் உள்ள கணக்கில் வாடிக்கையாளர் பணப் பரிவர்த்தனை செய்யலாம். ஏ.டி.எம். வசதி ராமநாதபுரம், ராமேசுவரம் தபால் நிலையங் களில் தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)