Wednesday, March 8, 2017
இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ராமநாதபுர மாவட்டத்தில் 18,220 பேர் எழுதுகின்றனர்!!
மாவட்டத்தில் இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை
18,220 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 8) துவங்கி மார்ச் 30
வரை நடக்கிறது.
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 138 பள்ளிகளைச் சேர்ந்த 5,037
மாணவர்கள், 5,354 மாணவிகள் 42 மையங்களில் எழுதுகின்றனர். பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 3,907
மாணவர்கள், 3,922 மாணவிகள் 27 மையங்களில் எழுதுகின்றனர். மாற்றுத்திறன் மாணவர் 34 பேர் தேர்வெழுத தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
10
தேர்வறைக்கு ஒரு நிற்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு
நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைகேடுகள் நடக்காமலிருக்க 69 மையங்களை
ஆய்வு செய்ய 6
மண்டலமாக பிரித்து 6 ஆய்வு அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் நடராஜன், எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., தேர்வு
மையங்களை பார்வையிடுகின்றனர் என முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறினார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் மார்ச் 10ல் வேலைவாய்ப்பு முகாம்!!
தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், வேலை
வாய்ப்புத்துறை சார்பில் மாவட்டங்களில் மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு சந்தை
நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் தனியார் நிறுவனங்களில்
பணியமர்த்தப்படுகின்றனர்.
இதன்படி மார்ச் 10 காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு
சந்தை நடக்கிறது.
5
பாஸ்போர்ட் அளவு போட்டோ, அனைத்து
கல்விச்சான்றுகளுடன் இதில் பங்கேற்க வேண்டும்.
தனியார் துறையில் வேலை பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது, என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)