முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 1, 2017

இன்று முதல் என்ஜினீயரிங் விண்ணப்பம், ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு!!

1 comment :
2017-2018ம் கல்வி ஆண்டிற்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 1 இன்று முதல் ஆரம்பமாகும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. பி.டெக் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்வதற்கு எந்தவித நுழைவுத் தேர்வும் கிடையாது. 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.

விண்ணப்பங்களை இன்று முதல் மே 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் www.tnea.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


மே 12ந் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள்வெளிவருகின்றன. அதன் பிறகு மாணவ மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும்.

கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 500க்கு டி.டி. எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து (நகல்கள்) அணணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பமும், வேலை வாய்ப்பும் சேர்க்கப்பட்டு உள்ளது. வருகிற கல்வி ஆண்டில் அந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாப் பல்கலைக்கழகம் (ஐஐடி நீங்கலாக) தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,
தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன்,
அண்ணா பல்கலைக்கழகம்,
கிண்டி,

சென்னை - 600025.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)