Tuesday, July 4, 2017
ராமநாதபுர மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை!!
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில்
வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால் பாதிக்கப்பட்ட
விவசாயிகளின் நலனை பாதுகாக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை
வழங்கிட 07 மார்ச் 2017
அன்று உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து
கிராமங்களிலும் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மொத்தம் 390 கிராமங்களில் 2,05,482 விவசாயிகளின் வேளாண்
பயிர்களுக்கு ரூ.175.19 கோடி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.13.95 கோடி என மொத்தம் ரூ.189.14 கோடி மதிப்பில்
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளன.
இந்நிவாரணத் தொகையானது நெற்பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு
ரூ.13,500 வீதமும், நன்செய் நிலங்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு
ரூ.13,500 வீதமும், புஞ்சை ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.7,410 என்ற விகிதாச்சார அடிப்படையில்
வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த நிவாரணத் தொகையானது தமிழ்நாடு அரசின் மூலம்
சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த மாவட்டத்தில் உள்ள நயினார்கோவில்
ஒன்றியம் நகரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மூவலூர், உதயகுடி
மற்றும் நகரமங்கலம் ஆகிய ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி
நிவாரணத்தொகை கிடைக்கவில்லை, நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள்
ஆகியும் இன்னும் பல விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை கிடைக்கவில்லை.
இதில் சில குளறுபடிகளும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது, இங்கு உள்ள கிராம நிர்வாக அலுவலர்
உள்ளூரில் உள்ள சில அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்க
வேண்டிய வறட்சி நிவாரணத்தொகையை கையாடல் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது நகரமங்கலம், பட்டா என்ன 61 புல என் 67, பெயர் முத்து
என்பவருக்கு சேரவேண்டிய நிவாரணத்தொகையை அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு முத்து
என்பவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு அவர் மூலம் அந்த தொகை கிராம நிர்வாக
அலுவலர் மற்றும் அவருடன் தொடர்பு உடைவர்களும் பிரித்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதே போல் பல விவசாயிகளின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது
இதை கேள்விப்பட்டு கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு
கேட்டதற்கு பாதி தொகை வேண்டுமானால் வாங்கிகொள் என்று மிரட்டுவதாகவும் இல்லையெனில்
யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்து கொள் என்று ஒருமையில் பேசுவதாகவும்
கிராம மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்
இதை பற்றி மாவட்ட ஆட்சியர் திரு நடராஜன் மற்றும் மாவட்ட
வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் பரமக்குடி வட்டாட்சியர் ராஜகுரு அவர்களிடம்
நேரடியாகவும் தொலைபேசி மூலமும் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையோ அல்லது
விசாரணையோ இதுவரை நடக்க வில்லை.
இதை படிக்கும் எதாவது ஒரு நேர்மயான அதிகாரி இந்த
கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்க உதவுவார் என்ற நம்பிகையில் மொத்த கிராம மக்கள்
சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்.
இப்படிக்கு
கிராம பொதுமக்கள்
கிராம பொதுமக்கள்
செய்தி:
ராஜாமணி
நகரமங்கலம்
நகரமங்கலம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)