முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 1, 2017

ராமேஸ்வரம்- பைசாபாத் ரெயில் ராமநாதபுரத்தில் நின்று செல்லுமா?!!

No comments :


ராமநாதபுரம் நகர் மாவட்ட தலைநகர் மட்டுமின்றி வளர்ந்து வரும் நகரமாகும். புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள ராமேசுவரம்பைசாபாத் ரெயில் ராமநாதபுரத்தில் நிற்காமல் செல்கிறது.

இந்த ரெயிலில் பயணம் செய்யவேண்டுமென்றால் 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேசுவரத்துக்கோ, அல்லது 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரைக்கோ தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். எனவே பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்ல ஏதுவாக கால அட்டவணையை மாற்றி அமைத்து உத்தரவிடவேண்டும்.

மேலும் ராமேசுவரம்சென்னை இடையே இருவழிகளிலும் அதிவிரைவு பகல் நேர ரெயில் விட வேண்டும் என இப்பகுதி மக்களும், வர்த்தக சங்க அமைப்புகளும் வைத்த கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.பாம்பன் ரெயில் மேம்பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த ரெயிலின் அவசிய தேவை குறித்து எடுத்துக்கூறி வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி இந்த ரெயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட வேண்டும் என்று தெரிவித்தார்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி பகல் நேர விரைவு ரெயில் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)