முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 2, 2017

2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டம் இல்லை!!

No comments :

2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தடை செய்து மத்திய அரசு கடந்தாண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனை ஈடுசெய்யும் வகையில் புதிய
2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாடு நிலவியது.


இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணிகளை ரிசர்வ் வங்கி திடீரென்று நிறுத்தியது. இதையடுத்து, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலாக புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இந்நிலையில்,2 ஆயிரம் நோட்டுக்களை தடை செய்யும் திட்டமில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். வேறு சில காரணங்களுக்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது குறித்து விளக்கத்தை உரிய நேரத்தில் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)