முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 3, 2017

விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை ஏற்பாடு, கலெக்டர் நேரில் ஆய்வு!!

No comments :
ராமநாதபுரத்தை அடுத்துள்ள பட்டணம்காத்தான் கிராமத்தில் உள்ள காட்டூருணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் நடராஜன் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016–17–ம் ஆண்டில் எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மேலும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 542 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 981 எக்டேர் பரப்புக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மிளகாய் போன்ற தோட்டக்கலை விவசாயிகளுக்கு 10,044 விவசாயிகளுக்கு 8,220 எக்டேர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுஉள்ளது.



இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016–17–ம் ஆண்டு பிரதம மந்திரி புதிய வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் நெல்–2 பயிருக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.355 கோடியே 28 லட்சம் வரப்பெற்றுள்ளது. இந்த தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் வேளாண் காப்பீடு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.101 கோடி, வணிக வங்கிகள் மூலம் ரூ.5 கோடியே 87 லட்சம் மற்றும் வேளாண் காப்பீடு நிறுவனம் மூலம் ரூ.43 கோடியே 87 லட்சம் என பயிர் காப்பீடு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தம் 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல்–2 பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி சேமிப்பு கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன் உடனிருந்தார்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆக.,31 வரை விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு மாணவருக்கு ஆண்டிற்கு 1000 ரூபாய். 
6
முதல் 8 வரை 3,000 ரூபாய், 9 முதல் பிளஸ் 2 வரை 4,000, 
இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 6,000,
உயர் கல்வி(முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவம்) மாணவர்களுக்கு 7,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்வோர், இதர அரசுத்துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. 

பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்கள் மூலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆக.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்,


என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

1325 ஆசிரியர் பணிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

பள்ளி கல்வி மற்றும் பிற துறைகளில் சிறப்பு ஆசிரியர்களுக்கான(உடற்கல்வி, ஓவியம், இசை, தையல்) பணியிடங்களை நிரப்புகிறது டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி.

தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.8.2017 ஆகும்.

பணியின் பெயர்: சிறப்பு ஆசிரியர்கள்(உடற்கல்வி, ஓவியம், இசை, தையல்)



காலிப் பணியிடங்கள்: 1325

வயது வரம்பு: 1.7.2017 தேதியின்படி 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஊதிய வரம்பு: ரூ. 5200- ரூ. 20,2000+ ஜிபி ரூ.2,800

கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி./உயர் நிலைக் கல்வி படிப்பு முடித்து ஆசிரியர்கள் சான்றிதழ் மற்றும் தேவையான துறையில் தகுதி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அளிக்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்


மேலும் விபரம் அறிய : http://www.trb.tn.nic.in/SPL2017/26072017/Notification.pdf

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)