முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 7, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12.8.2017 அன்று பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான கூட்டம் வரும் 12.8.2017 காலை 10 மணிக்கு ராமநாதபுரம் வட்டம் புதுமடம், ராமேஸ்வரம் வட்டம்- நடராஜபுரம், திருவாடானை வட்டம்- திருப்பாலைக்குடி, பரமக்குடி வட்டம்- பகைவென்றி, முதுகுளத்தூர் நகர் பகுதி, கடலாடி வட்டம் டி.புனவாசல், கமுதி வட்டம்- கள்ளிகுளம், கீழக்கரை வட்டம்- மாயாகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் சம்பந்தமான புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற தொடர்புடைய மனுக்களை அளித்து பயன்பெறலாம்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (8/8/2017) மின் தடை!!

No comments :
கீழக்கரை உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதனால் கீழக்கரை நகர் முழுவதும், மாயாகுளம், முகமது சதக் கல்லுரிகள் பகுதி, புல்லந்தை, ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை, தேரிருவேலி, களரி, பாலையரேந்தல், மோர்குளம், காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார். 


செய்தி: திரு தாஹிர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை!!

No comments :
ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டெஸ்க் டாப் பப்ளிசிங் (டிடிபி) மற்றும் தையல் தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் 2017க்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்பிரிவுகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் மட்டும் நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.


கூடுதல் விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி எண்ணில் 04567-231214-ல் தொடர்புகொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)