முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Wednesday, August 9, 2017

ஆகஸ்ட் 16ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு!!

No comments :

கலெக்டர் நடராஜன்  வெளியிட்ட அறிக்கை:

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதையொட்டி வரும் 16ம் தேதி  ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 


அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 19ம் தேதி சனிக்கிழமையினை பணி நாளாக கருதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட வேண்டும். 

வரும் 16ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சவுதி அரேபியாவில் ஐந்து ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பியவர் விமான நிலையத்தில் கைது!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டம் செய்யாமங்கலத்தை சேர்ந்த குற்ற வழக்கில் தேடப்பட்டவர், ஐந்து ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் தலைமறைவாக இருந்தார். அவர் தமிழகம் திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

அபிராமம் அருகே செய்யாமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மகன் செந்தில்குமார், 32. இவரது அத்தை சண்முகம் என்பவரது மகள் இருக்கும் போது, முறைமாப்பிள்ளையான செந்தில்குமாருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தனர்.இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. 2012 மார்ச் 2ம் தேதி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சண்முகம் தாக்கப்பட்டார்.  அவரது புகாரின் பேரில்  அபிராமம் போலீ்ஸ்   செந்தில்குமார், அவரது தந்தை தங்கவேல், மனைவி நவகனி, உறவினர்கள் பிரேம்குமார், ராஜேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை தவிர மற்ற நான்கு பேரையும் கைது செய்தனர், செந்தில்குமார் சவுதி அரேபியாவிற்கு தப்பி விட்டார்.
 கோர்ட்டில் நடந்த வழக்கில் செந்தில்குமார் ஆஜராகாததால், 2016 ஜூன் மாதம் இவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.


இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய போது, சென்னை விமான நிலையத்தில், செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். பின் அவரை கமுதி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)