முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 12, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நடராஜன் தகவல் தெரிவித்தார்.

மாவட்ட தொழில் மையங்களின் மூலம் செயல்படுத்தப்படும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நேரடியாக விண்ணப்பம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும், எளிதாக விண்ணப்பிக்கும் வகையிலும், ஒவ்வொரு கட்டத்திலும் விண்ணப்பத்தின் நிலையை அறியும்படியாகவும் கடந்த 1ம் தேதி முதல் இணையதளம் மூலம் கடன் வசதி பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர்  www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 வயதிற்கு மேல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும், சிறப்பு பிரிவினர் 45 வயது வரை இருக்கலாம். 

திட்ட முதலீட்டில் மானியம் 25 சதவீதம் விழுக்காடு, அதிகபட்ச மானியம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம். குடும்ப ஆண்டுவருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2017- 18ம் ஆண்டிற்கு மானியமாக ரூ.36.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுவரையிலும் இத்திட்டத்தின் கீழ் குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளதாலும், ஏராளமான இளம் தொழில் முனைவோர் மானியத்துடன் தொழில் கடன் பெற வாய்ப்புள்ளதாலும் இந்த வாய்ப்பை இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி தொழிற்கடன் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் (அலுவலக தொலைபேசி எண்: 04567 230497) என கலெக்டர் தெரிவித்தார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கல்லூரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!!

No comments :
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி உள்ளது. சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை, முதுகலை படிப்புகளை பெற்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வெளியூர் மாணவர்கள் பலர் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு வசதியாக கல்லூரி அருகில் விடுதி வசதி ஏற்படுத்தி தர கடந்த பல வருடங்களாக மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இதுநாள்வரை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை. இதேபோல் கடந்த 2 வருடங்களாக பட்டமளிப்பு விழாவும் நடத்தவில்லை. 

விரைவில் விடுதி வசதி ஏற்படுத்தவும், பட்டமளிப்பு விழாவும் நடத்தவும் வலியுறுத்தி நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். 


இதையடுத்து கல்லூரியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)