Sunday, August 20, 2017
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஏடிஎம் சென்டர், கனவு நினைவேறுமா?!!
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஏடிஎம்
சென்டர் அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை, மதுரை, திருச்சி
உள்ளிட்ட நகரங்களுக்கு இருமார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து
ரயில்களும் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் நின்று செல்கிறது. தினந்தோறும்
ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான
வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது.
ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே
மேம்பாலம் பிளாட்பாரத்தின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 2வது
பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகள் வெகுதூரம் தங்கள் சுமந்து வரும் சுமைகளுடன்
மேம்பாலத்தில் ஏறி அடுத்த பிளாட்பாரம் செல்ல வேண்டியுள்ளது. பயணிகள் சிரமத்தை
தவிர்க்கும் வகையில் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் புதிய நடைமேம்பாலம் அமைக்க
வேண்டும்.
இதுதவிர சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பிற நகரங்களில் உள்ளது போல வங்கி ஏடிஎம் மையம் வசதி அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கோரிக்கை!!
ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக
செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து
ஓடியதால் சுகாதார சீர்கேடு இருந்து வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த
வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று அரசு பாதாள சாக்கடை
திட்டத்தை அறிவித்தது.
தற்போது இத்திட்டம் மூலம் வீடுகள், வணிக
நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளுக்கு இணைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு குடியிருப்புகளுக்கு முழுமையாக இணைப்பு
அளிக்கப்படவில்லை.
இதனால் பல தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைபட்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதிகாரிகள் நகரில் கழிவுநீர் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், இணைப்பு இல்லாத தெருக்களில் முழுமையாக இணைப்பு ஏற்படுத்தவும் ஆவண செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)