முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 7, 2017

புளுவேல் விளையாட்டை அலைபேசியில் பிறருக்கு பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!!

No comments :
புளுவேல் விளையாட்டை அலைபேசியில் பிறருக்கு பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் நடராஜன் எச்சரித்தார்.

புளுவேல் விளையாட்டு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நடராஜன் பேசியதாவது: 

இணையதளம் மற்றும் நவீன அலைபேசிகள் மூலம் பரவி வரும் புளுவேல் என்ற கணினி விளையாட்டு, 13 முதல் 25 வயதுள்ள வளர் இளம் பருவத்தினரை பாதிப்படைய செய்கிறது. 

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பள்ளி, கல்லுாரிகளில் 
மாணவர்களின் இணையதள பயன்பாட்டை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.


தங்கள் குழந்தைகள் அதிக நேரம் இணைய தள விளையாட்டில் ஈடுபடுகின்றனரா, இரவில் அதிக நேரம் தனி அறையில் அல்லது மொட்டை மாடியில் இணைய தளத்தில் விளையாடுகின்றனரா, என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். 

நமது பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். யாரிடமும் பேசாமல் தனியாக இருந்தாலோ, நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தாலோ கவனித்து சரி செய்ய வேண்டும். 

குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடவும், மனம் விட்டு பேசவும் வேண்டும். இரவு நேரங்களில் கண்விழிக்க வைக்க கூடாது. புளுவேல் விளையாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர், ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் பேசினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

செப்டம்பர் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கண்சிகிச்சை முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடக்கும் இடங்கள்:

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில்,
செப்.,9ல் பரமக்குடி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியிலும்,
செப்.,10ல் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
செப்.,15ல் நிலக்கோட்டை தமியான் கண் மருத்துவமனை சார்பில் சின்ன கீரமங்கலம் ஆர்.சி.சர்ச் வளாகத்தில் நடக்கிறது.

செப்.,16ல் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் பரமக்குடி ஆயிர வைசிய கல்யாண மஹாலிலும்,

செப்.,19ல் மதுரை மீனாட்சி மிஷன் கண் மருத்துவமனை சார்பில் மண்டபம் பேரூராட்சி கல்யாண மஹாலிலும் நடப்பதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)