முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 10, 2017

ராமநாதபுர மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!!

No comments :
பரமக்குடியில் திங்கட்கிழமை இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதையொட்டி மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. ஐ.ஜி.க்கள் சைலேஷ்குமார் யாதவ், சண்முகராஜேஸ்வரன், டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், கபில்குமார்சரட்கர், பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், தீபக்தாமோர், 16 போலீஸ் சூப்பிரண்டுகள், 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 26 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மேற்பார்வையில் ஆயுதப்படை, பட்டாலியனை சேர்ந்த 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதவிர, ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்து 700 போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த விழாவிற்காக ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் இருந்து வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களின் உயர் அதிகாரி முன்னிலையில் ஆஜராகி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுஉள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பணியாற்றிய மயில்வாகனன், சிபிசக்கரவர்த்தி, சரவணன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக கலவர தடுப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மேலும், மோப்ப நாய்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)