முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 1, 2017

ராமேஸ்வர கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிலை திருட்டு!!

No comments :
ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான லட்சுமணர் சிலை திருட்டு போயுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்வர்.

இந்நிலையில் கோவிலில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள லட்சுமணர் சிலை திருட்டுப் போயுள்ளது. இக்கோவிலில் இருக்கும் பொருட்களையும் சொத்துக்களையும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள்.

அவ்வாறு ஆய்வு செய்யும் போது லட்சுமணர் சிலை திருட்டுப் போனது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திருட்டு போன லட்சுமணர் சிலை தொடர்பாக விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஐ.பொன். மாணிக்க வேல் கூறியுள்ளார்.


செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)