முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 31, 2017

திறந்தவெளி பாராக மாறி வரும் பேருந்து நிலையம்!!

No comments :
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டை இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக மாற்றி வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

குடிமகன்கள் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குடித்து விட்டு பஸ் ஸ்டாண்டின் பிளாட்பாரங்களிலேயே படுத்து விடுகின்றனர்.


போதை அளவுக்கு அதிகமாகி இரவு நேரங்களில் குடிபோதையில் பஸ் ஸ்டாண்டு ரோட்டில் பிரச்னை செய்கின்றனர்.
வெளியிடங்களில் வேலை செய்துவிட்டு இரவு ரயில்களில் திரும்பும் பெண்கள் கூட ரோட்டை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

ரோந்து பணியில் இருக்கும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். 


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சென்னையில் என்சிசி யில் வேலை வாய்ப்பு!!

No comments :


சென்னையில் என்சிசி நேசனல் கேடட் கார்பஸ் டிபார்ட் மெண்டில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

என்சிசியில் அறிவிப்பட்டுள்ள பணியிடங்களுக்கு எட்டாவது பாஸ் செய்திருந்தால் போதுமானது ஆகும்.
 

என்சிசியில் ஸ்டோர் அஸிஸ்டெண்ட் பணிக்கு ஒரு ஆள் பணியமர்வு மற்றும் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பணிக்கும் ஒரு பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது . என்சிசியில் வேலை வாய்ப்பு ஸ்டோர் கீப்பர் அத்துடன் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 4800 வழங்குவது கிரேடு பே தொகை ரூபாய் 1300 வழங்கப்படுகிறது.விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் அந்தந்த பிரிவிற்கேற்ப வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் . என்சிசியின் இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அவற்றை தேவையான தகவல்களுடன்   பூர்த்தி செய்து முறையான சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும. சுய கையெப்பமிட்ட விண்ணப்பத்தை இணைத்து நவம்பர் 15க்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:
தி டெப்புட்டி டைரகடர்,
என்சிசி டைரக்ரேட் (டிஎன் , பி & ஏஎன்)
நேஷனல் கேடடர்டு கார்பஸ் ( என்சிசி ) டிபார்ட்மெண்ட்
ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ்

என்சிசியில் அதிகாரபூர்வ தளத்தின் அறிவிக்கை இணைய இணைப்பை இணைத்துள்ளோம்.

https://drive.google.com/file/d/0B37uB0UyFHsIMjhZcTJwbEg3RnM/view

விண்ணப்ப டவுன்லோடு செய்து கொள்ளவும்  .

என்சிசியில் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கவும். 


வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)