முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 1, 2017

ராமநாதபுரம் மாவட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரிய பொருட்கள் அமைச்சர்கள் பார்வையிட்டனர்!!

1 comment :
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரிய பொருட்கள் அமைச்சர்கள் டாக்டர் மணிகண்டன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் உடனிருந்தார்.

அப்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:- 

தமிழ்நாடு அரசு தமிழ் கலாச்சாரத்தின் தொன்மையினை பாதுகாப்பதிலும், தமிழ்மொழி பெருமையினை ஆவணப்படுத்;துவதிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் தொல்லியல் துறையின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து மண்ணில் புதைந்துள்ள வரலாற்றுச் சுவடுகளை வெளிக்கொணர்ந்து ஆவனப்படுத்திடும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


குறிப்பாக ஆதிச்சநல்லூர், கீழடி, அழகன்குளம் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் பல்வேறு வியக்கத்தகு அரிய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் உள்ள வைகை ஆற்றங்கரைப் பகுதிகளில் மட்டும் இதுவரை 8 பருவங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.  சமீபத்தில் நடந்த எட்டாவது பருவ அகழ்வாராய்ச்சியின் மூலம் மட்டும்  பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் பயன்படுத்திய ஆபரணப் பொருட்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடியிலான மணிகள், விளையாட்டுப் பொருட்கள், இரும்பில் செய்யப்பட்ட பொருட்கள், நாணயங்கள் என மொத்தம் 13,000 அரிய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

இதுதவிர  மத்திய தரைக்கடல் நாடுகளோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்புகளை வெளிப்படுத்தும் அரிய மண்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  
 இவ்வாறாக கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை முறையாக ஆவனப்படுத்தி நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை, கலை,கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், அரசியல், அறிவியல் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து முழு வரலாறாக தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் ஆவனப்டுத்திடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  தமிழகத்தில் ரூ.21 கோடி மதிப்பில் உலகத் தரம் வாய்ந்த புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  

மிகவும் தொன்மை வாய்ந்த நமது கலாச்சாரத்தினை பறைசாற்றும் வகையில் பல்வேறு இலக்கிய சான்றுகள் உள்ளன.  இத்தகைய இலக்கியச் சான்றுகளை உரிய தொல்லியல் சான்றுகளுடன் ஆவனப்படுத்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மூலம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின் போது  மத்திய தொல்லியல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீராம், தொல்லியல்துறை துணை இயக்குநர் க.சிவானந்தம், அழகன்குளம் அகழ்வாய்வு பணி இயக்குநர் முனைவர்.ஜே.பாஸ்கர், தொல்லியல் துறை செயற்பொறியாளர் தங்கவேல், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வெ.குமார், முதுகுளத்தூர் கூட்டுறவு நிலவள வங்கித் தலைவர் இரா.தர்மர்  உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் அரசு சிறப்பு விருந்தினராக மு.க.ஸ்டாலின்!!

No comments :
ஷார்ஜாவில் நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் அரசு சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகங்கள், ஷார்ஜா அரசாங்கம் தொடர்ந்து 36 ஆண்டுகளாக மிகப்பெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், அனைத்து மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஷார்ஜா அரசின் விருந்தினர்களாக பங்கேற்றிருக்கின்றனர்.இந்த ஆண்டு ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சிக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு ஷார்ஜா அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின் நவம்பர் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி விழாவில் சிறப்பு உரையாற்றுகிறார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நவ-3ம் தேதி துபாயில் இரத்த தான முகாம்!!

No comments :
துபாய் ஈமான் அமைப்பு 03.11.2017 வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் முகாம் ஒன்றை நடத்துகிறது.

இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி. ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள டேலண்ட் ஸோன் நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது.இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.


முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)