முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 9, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.,11ல் பொது வினியோகத் திட்ட குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.,11ல் பொது வினியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டங்கள் நடக்கிறது.

பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசிசர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தாலுகா வாரியாக கிராமங்களில் சுழற்சி முறையில் பொது வினியோகத்திட்ட குறை தீர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.அதன்படி, நவ.,11ல் ராமநாதபுரம் தாலுகா மீனாட்சிபுரம்,
ராமேஸ்வரம் தாலுகாவில் பாம்பன்-சின்னப்பாலம்,
திருவாடானை-ஓரிகோட்டை,
பரமக்குடி-தெளிச்சாத்தநல்லுார்,
முதுகுளத்துார் டவுன்,
கடலாடி தாலுகாவில் எஸ்.மாரியூர்,
கமுதி-திம்மநாதபுரம்,
கீழக்கரை தாலுகா பாரதிநகர் ஆகிய இடங்களில் குறை தீர் கூட்டம் நடக்கிறது.

காலை 10:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில்,
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பிழை திருத்தம்,
பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம்,
முகவரி மாற்றம் செய்து பயனடையலாம்,


என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஏர்வாடி தர்ஹா பகுதியில் காலாவதியான உணவு பொருள்கள் விற்பனை? !!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருள்கள் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. இதனால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவிற்கு உள்ளுர் மற்றும் வெளியூர் மற்றும் கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மும்பை போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்தும் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மகானை தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.

இவர்கள் இங்குள்ள ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது நேற்று மிஞ்சிய குழம்புகளை சுடவைத்து பக்தர்களுக்கு மீண்டும் தருவதாகவும் கடைகளில் தண்ணீர் வாங்கினால் ஐ.எஸ்.ஐ முத்தரை இல்லாத குடிதண்ணீர் பாட்டில் மற்றும் பாக்கெட்களில் விற்பனை செய்து வருவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆகவே  பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)