முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 13, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு கட்டுப்பாட்டில் டெங்கு பாதிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூhட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் டெங்கு வைரஸ் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதேபோல டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுப்புற தூய்மைப்பணிகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் இத்தகைய வைரஸ் காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து மாணாக்கர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது.  

டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் என்ற வகை கொசு சுத்தமான நல்ல தண்ணீரில் உருவாகும். இவை சுமார் 500 மீட்டர் தொலைவு பறக்கும் தன்மை கொண்டதாகும். சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமலும், வீட்டு உபயோகத்திற்காக அன்றாடம் சேமித்து வைத்திருக்கும் தண்ணீர்; தொட்டி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி போன்றவற்றை தொடர்ச்சியான இடைவெளியில் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிப்பதன் மூலம் ஏடிஸ் கொசுப்புழு உருவாகாமல் தடுக்கலாம். 

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் டெங்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இத்தகைய தூய்மைப்பணிகள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பகுதி வாரியாக எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்களும் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு பேசினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் .ஜி.முத்துசாமி, செய்யதம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் மரு.பாபு அப்துல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினவேல், பள்ளி தலைமையாசிரியர் காஜா முஹைதீன் உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

துபாயில் நடைபெறும் இறுதி தீர்ப்புநாள் மாநாடு!!

No comments :
துபாயில் நடைபெறும் இறுதி தீர்ப்புநாள் மாநாடு!!

முன்பதிவு அவசியம்.







(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)