முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 25, 2017

பள்ளி செல்ல தினமும் ஆபத்தான ஆட்டோ பயணம், பரிதவிக்கும் பெற்றோர்கள்!!

No comments :

  
ள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றி செல்லும் அவல நிலை தொடர்ந்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

குறிப்பாக,
வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவில் ஆட்களை ஏற்ற வேண்டும், வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும், முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 





இருப்பினும் ராமநாதபுரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாடகை வாகனங்களில் இதுவரை அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வில்லை. பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளை அதிகளவில் ஏற்றி கொண்டு அதிவேகத்தில் ஓட்டி செல்கின்றனர். நகர் பகுதிகளில் ஆட்டோக்களில் மாணவ, மாணவிகளை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏற்றி செல்கின்றனர். ஆட்டோக்களின் வெளிப்புறம் மாணவ, மாணவிகளின் புத்தக பைகளை தொங்கவிட்டு செல்கின்றனர். 

இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் ஒருவர் மீது ஒருவர் உட்கார வைத்தும், டிரைவர் சீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்களை உட்கார வைத்து கொண்டும் செல்வதும் தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)