முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 4, 2017

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் பணிகளை பார்வையிட்டார்!!

No comments :
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மனநல மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் முனைவர் நடராஜன் இனிப்பு வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு
  உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் முனைவர் ச.நடராஜன் நேரடியாக சென்று, சிகிச்சை மற்றும் மனநல பயிற்சி பெற்று வரும் நபர்களுக்கு இனிப்புகளை வழங்கி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமிய சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி வழங்கும் பணிகளை பார்வையிட்டார். 

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் இம்மருத்துவமனைக்கு வருகை தந்து மனநல தொடர்பான சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். 

இம்மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமிய சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, வயர் கூடை பின்னுதல், ஊதுபத்தி தயாரித்தல், மரம் மற்றும் கடல் சங்கு ஆகியவற்றால் ஆன சிறிய வகை வீட்டு அலங்காரப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு நேரடியாக வருகை தந்து மனநல சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து சிகிச்சை பெறும் நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமிய சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகளையும் பார்வையிட்டதோடு, அவர்கள் தயாரித்த அலங்கார பொருட்களையும் பார்வையிட்டார்.

மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நபர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்வதோடு அவர்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடத்தில் அறிவுருத்தினார். அதே நேரத்தில் இது போன்ற தொழிற்பயிற்சிகளை தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களிடத்தில் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மைய பணியாளர்கள் உடனிருந்தனர்.

செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தடையை மீறி ராமநாதபுர மாவட்டத்தில் ப்ளாஸ்டி பைகள், குவளைகள் பயன்பாடு; ப்ளாஸ்டிக்கை புறக்கனிப்போம், பூமியை காபோம்!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் பயன்படுத்த தடைவிதித்தும், தாராளமாக அனைத்து இடங்களில் பயன்படுத்தும் நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம்தனுஷ்கோடிதேவிபட்டினம்திருப்புல்லாணிசேதுக்கரைஉத்தரகோசமங்கைஏர்வாடி தர்ஹாஅரியமான் பீச் ஆகிய இடங்கள் முக்கிய ஆன்மிக தலங்களாகவும்சுற்றுலா தலமாவும் உள்ளன. தேவிபட்டினத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷாண கோயில் சிறப்பு பெற்றது. இங்கு பக்தர்கள்சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருவதால் அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறது.
இருந்தபோதும் இங்கு அவற்றை பராமரிக்கவும் சுகாதார நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம் எடுப்பதில்லை. நவபாஷாண பகுதி உட்பட எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள்பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து சுகாதாரக் கேடாக உள்ளது. நவபாஷாண பகுதியில் சேறும்சகதியுமாகி துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகில் உள்ள கடற்கரை பகுதியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடற்கரை முழுவதும் பிளாஸ்டிக் பைகள் நிறைந்து கிடக்கின்றன. இவை கடலுக்குள் செல்லும் போது மீன் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் அதை விழுங்கி இறக்க நேரிடும். கடல் நீரும் மாசுபட வாய்ப்புள்ளது.



ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பூமிக்கு அடியில் மக்காத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் உட்பட தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் விற்க, பயன்படுத்த அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற தடை உத்தரவு இல்லாமல் இருந்தது. ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்க, பயன்படுத்த ஏற்கனவே தடை விதித்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கடைகள், பேக்கரிகள், ஓட்டல்களில் வர்த்தக சங்கம் மூலம் அறிவிப்பு பலகைகளும் தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கு பார்த்தாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டீ கப்புகள், கப்புகள் விற்பனை செய்வதும், பொருட்கள் வாங்கும்போதும் வழங்குவதும் தொடர்கிறது. 

இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் வழக்கம் போல் சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உத்தரவுக்கு பின் நகராட்சி பகுதிகளில் தரம் குறைந்த பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் பயன்படுத்துவதை தடுக்கப்படவில்லை. பிளாஸ்டிக்கு தடை உத்தரவு மட்டும் போட்டுவிட்டு அதை அமல்படுத்தாமல் உள்ளனர்.

முறையான டொடர் ஆய்வும் தேவை என்பது ஒரு கருத்தாக இருந்தாலும்
, வியாபரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பில்லாமல் பூமியை ப்ளாஸ்டிக்கிலிருந்து பாதுகாக்க முடியாது.

ப்ளாஸ்டிக்கை புறக்கனிப்போம், பூமியை காபோம்!!

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)