முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Monday, December 18, 2017

ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர்!!

No comments :
ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு   அக்னிதீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடினர்.

ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்  ஆயிரத்துக்கு  மேலான பக்தர்கள் ரயில் மற்றும் அரசு பேருந்து, தனியார் வாகனம் மூலம் வந்து குவிந்தனர். அதன் பின்னர் அக்னிதீர்த்தம் கடல் பகுதியி்ல் முன்னோர்களுக்கு வருடாந்திர திதி பூஜையும்,தர்பணபூஜைகள் மற்றும் சிறப்பு  பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டு அக்னிதீர்த்தக்கடலிலும், ராமநாதசுவாமி திருக்கோயிலுள்ள  22 தீர்த்தக்கிணற்றில் புனித நீராடினார்கள்.

அமாவாசையை முன்னிட்டு திருக்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி குடிநீர் வசதிகள், ஓய்வு இடங்கள்,வழக்கத்தைவிட பக்தர்களுக்கு கூடுதாலக அன்னதானம் உள்பட சிறப்பான முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி  உத்தரவின்பேரில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆலோசணைப்படி அலுவலர்களும்.ஊழியர்களும் செய்திருந்தனர். ராமேசுவரம் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி நடைகள் திறப்பு நேரம் மாற்றம்.
 ராமேசுவரம்,டிச,17:ராமேசுவரம் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக மார்கழி மாதம் 1 ஆம் தேதி முதல் திருக்கோயில் நடைகள் திறக்கப்படும் நேரம் கோயில் நிர்வாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் 3 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு தொடர்ந்து அதிகாலையில் 4 மணி முதல் 5 மணிவரை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து காலபூஜைகளும், சிறப்பு பூஜைகளும்,தீபாரதனை வழிபாடுகளும் நடைபெறும்.அதன் பின்னர் இரவு 8 மணிக்கு கோயில் நடைகள் சாத்தப்படும். அதுபோல பக்தர்கள் கோயிலுள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதற்காக அதிகாலை 5 மணிக்கு தீர்த்தக்கவுண்டர்கள் திறக்கப்படும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தெரிவித்தார். 


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் சார்பில் வட்டியில்லா கடன்!!

No comments :
ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கு  வட்டியில்லாமல் தொழில் கடன் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க தலைவர்  நஜ்முதீன், செயலாளர் காஜிஅலி, பொருளாளர் காதர்மீரான் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் இந்தியாவில் 12 மாநிலங்களில் 33 கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் ராமநாதபுரத்தில் முகம்மது சதக் சென்டர் வளாகத்தில் தனது புதிய கிளை தொடங்கி வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் சங்கத்தில் ஏதேனும் ஒரு அடையாள சான்றுடன் உறுப்பினராக சேர்பவர்களுக்கு அவர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் சேவை கடன் மற்றும் தொழில் கடன் வழங்கப்படுகிறது.  ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்ட கடன் தொகையில் 98 சதவீத கடன் தொகை முழுமையாக திருப்பி பெறப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பல்வேறு வைப்பு நிதி, சேமிப்பு திட்டங்களின் மூலம் ரூ.5 லட்சத்தில் தொடங்கி ரூ.1 கோடியே 10 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவம், கல்வி முதலியவற்றிற்கு உடனடி கடன் உதவியும், தொழில்கடன் உள்ளிட்டவைகளுக்கு பயனாளி அளிக்கும் திட்ட அறிக்கையின் அடிப்படையிலும் கடன் வழங்கப்படுகிறது. 
 


வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன் ஒரு நபருக்கு ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலும், குழுக்கடன் ஒரு குழுவிற்கு ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. தொழில் கடன் மேம்பாட்டு பயிற்சி பெற்று அதனை நிறைவு செய்த குழுக்களுக்கு ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். தனிநபர் தொழில் கடன் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் கிளை தொடங்கப்பட்டு கடந்த 6 மாதத்தில் 200 பேருக்கு ரூ.60 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.  கடன் வாங்கியவர்கள் தாங்கள் பெற்ற கடன் தொகையில் தொடங்கப்பட்ட தொழில் முறையாக நடத்த முடியாமல் போனால் அவர்களின் கடன் தொகையை இருக்கும் தொழில் பொருட்களை விற்பனை செய்து பங்கிட்டு கொள்ளும் வசதி உள்ளதால் பயனாளிகளை மேலும் கடனாளியாக்கும் அவல நிலை இந்த கூட்டுறவு சங்கத்தில் இருப்பதில்லை. எந்த ஒரு மதத்தினருக்கு மட்டுமல்லாமல்அனைத்து மதத்தினருக்கும் பாரபட்சமின்றி ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தங்களின் தொழில் வாய்ப்பினை பெருக்கி கொள்ளலாம். வட்டியில்லாமல் கடன் வழங்குவதால் இந்தியா முழவதிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் தற்போது ராமநாதபுரத்திலும் மக்களின் பேராதவை பெற்று வருகிறது.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)