(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 3, 2018

வார்டுகள் மறுவரையறையில் குளறுபடி; கலெக்டரிடம் புகார்!!

No comments :
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த பட்டியல் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரித்து வகைப்படுத்தப்பட்டு வார்டுகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கீழக்கரை நகராட்சி பகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள மறுவரையறை பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக நகர் நல நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன்படி கீழக்கரை மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:


கீழக்கரை நகராட்சி தயாரிக்கப்பட்டுள்ள மறுவரையறை பட்டியல் முறையான ஆய்வு செய்யப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
கடந்த 2011–ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டிய இந்த பட்டியல் முறைப்படி தயாரிக்கப்படவில்லை. ஏனெனில், மறுவரையறை பட்டியலில் மக்கள் தொகை 38 ஆயிரத்து 355 என குறிப்பிடப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நகரசபை நிர்வாகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் கீழக்கரை நகரசபையில் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை 47 ஆயிரத்து 730 ஆகும்.

ஆனால், இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் வார்டுகளை வரைமுறைப்படுத்தப்படாமல் மேலோட்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட வார்டுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த பட்டியலை நீக்கிவிட்டு முறையான ஆய்வு செய்து முழுமையான பட்டியல் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment