(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 3, 2018

ஔவையார் விருது பெற மகளிர் விண்ணப்பிக்கலாம்!!

No comments :


சமூக நலத்துறை மூலம் 2017-18ம் ஆண்டு உலக மகளிர் தினவிழாவில், பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த மகளிருக்கு ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு ரொக்கப்பரிசுதங்கப்பதக்கம் முதல்வரால் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூகநலன் சார்ந்த நடவடிக்கைபெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைமொழிஇனம்பண்பாடுகலைஅறிவியல்நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரத்தை ஒரு பக்க அளவில் தமிழ் (ம) ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும்.

இதனுடன் விண்ணப்பதாரரின் முழு விவரம் அடங்கிய படிவத்தில் கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஆகியவற்றுடன் கூடிய கருத்துரு தமிழ் (ம) ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில் பெற்று, ஜனவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment