(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 28, 2018

ராமநாதபுரத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுப.த.திவாகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன்முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திபொதுக்குழு உறுப்பினர் அகமது தம்பிமுன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல்திசைவீரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.



ராமநாதபுரம் நகர் தி.மு.க. செயலாளர் கார்மேகம் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏழை மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய இருமடங்கு பஸ்கட்டண உயர்வினை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் பேசியதவாது:- இலவச திட்டங்களை அறிவித்து அதன்மூலம் மக்களிடம் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு நிர்வாக திறன் இன்றி செயல்படாமல் முடங்கிபோய் உள்ளது. அ.தி.மு.க. அரசு பஸ் கட்டணத்தை அதிரடியாக இருமடங்கு உயர்த்தி உள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதனால், கிராமப்புற ஏழை மக்கள் அன்றாடம் பஸ்சில் வேலைகளுக்கு செல்லும் அலுவலர்கள், கூலித்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக அரசும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன. பஸ் கட்டண உயர்வினை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். அப்படி வாபஸ்பெறாவிட்டால் தி.மு.க. சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, விவசாய அணி துரை, பி.டி.ராஜா, கவிதாகதிரேசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், துணை தலைவர் பாரிராஜன், நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர் சேதுபாண்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஜீசேதுபதி, நகர் தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment