(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 18, 2018

பிப்-24-ந்தேதி குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் முகாம் – கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் வழங்குவது தொடர்பான கூட்டம் மற்றும் தேசிய குடல்புழு நாள் பற்றிய கண்காணிப்புக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாதம் முதல் வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
இந்த வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டினால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடுமாலைக்கண் நோய்தோல் நோய் மற்றும் வயிற்றுப்புண் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க வைட்டமின் திரவம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் லட்சத்து 11 ஆயிரத்து 417 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.



இந்த பணி நாளை முதல் அனைத்து துணை சுகாதார மையத்திலும், அதனை தொடர்ந்து நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி வரை அங்கன்வாடி மையங்களிலும் கொடுக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் இந்த முகாமில் தங்களது குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முல்லைக்கொடி, துணை இயக்குனர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment