(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 22, 2018

ராமநாதபுரம் மாவட்ட த்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது நாளை நமதே’ அரசியல் பயணத்தை நேற்று தொடங்கினார்.

இதற்காகநேற்றுமுன்தினம் இரவே ராமேசுவரம் வந்த அவர் நேற்று காலை 7.40 மணிக்குமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்குச் சென்றார். அவரை அப்துல்கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர்அப்துல் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன்பேரன்கள் சேக்தாவூதுசேக் சலீம்அண்ணன் மகள் நசீமா மரைக்காயர்நிஜாமுதீன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். கமல்ஹாசனுக்கு அப்துல்கலாம் போட்டோ பரிசாக அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வீட்டின் முதல் மாடிக்குச்சென்று அப்துல் கலாம் அருங்காட்சியகத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார்.

அங்குமக்கள் பிரதிநிதிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதை விளக்கும் வகையிலும்பாரத மக்களே நாம் எங்கிருக்கிறோம் என்ற தலைப்பிலும் இடம்பெற்று இருந்த கருத்துக்களை கமல்ஹாசன் உற்றுநோக்கி கவனித்து வாசித்தார்.
பின்பு அவர், அப்துல்கலாம் படித்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புறப்பட்டார். ஆனால் அங்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அறிந்த கமல்ஹாசன், பள்ளிக்கூடத்தின் எதிரே காரை நிறுத்தச்சொல்லி சிறிது நேரம் அங்கு நின்றபடி பார்வையிட்டு சென்றார்.

இதையடுத்து காலை 9.25 மணிக்கு மீனவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ராமேசுவரம் கணேஷ் மகாலில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது:-

மீனவர்களின் சுக, துக்கங்களை பத்திரிகைகளை படித்து அறிந்து கொள்வதைவிட நேரில் வந்து அறிந்து கொள்ளவே ஆர்வம். மீனவர்களுக்கு வெவ்வேறு அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அதை நிறைவேற்றாமல் உள்ளன. மீனவர்கள் பிரச்சினை வரும்போது அதைப்பற்றி பேசாமல் திசை திருப்புவதற்காக வேறு பிரச்சினை பேசப்படுகிறது. இது வாடிக்கையாகி விட்டது. அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது.

உரிமைக்காக போராடும் போது தடியடி நடத்துவது தான் தற்போது நடந்து வருகிறது. உரிமைக்காக போராடுபவர்கள் மீது தடியடி நடத்தக் கூடாது. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தான் ஒரு அரசின் கடமை. மீனவர்களை பொறுத்தவரையில் சர்வதேச பிரச்சினையும் உள்ளது. எனவே அதனை சாதுர்யமாக கையாள வேண்டும். இன்று மாலை புதிய கட்சி தொடங்க உள்ளேன். அதற்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். கடமைப்பட்டவர்கள் கட்டாயம் வரவேண்டும். உங்களின் நிலையை அறிய மற்றொரு நாளில் கண்டிப்பாக சந்தித்துப் பேசுவேன்.

இவ்வாறு அவர் பேசி விட்டு புறப்பட்டார்.

அவர் சிறிது நேரமே பேசி விட்டுக் கிளம்பியதால், அங்கு மனுக்களுடன் காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்பு கமல்ஹாசன் ஹயாத் ஓட்டலுக்குச்சென்றார். அஙகு நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு கமல்ஹாசன் நிருபர்களிடம் பேசியதாவது:-

கட்சிக்கு ஆள்சேர்ப்பதற்காக நான் ராமேசுவரம் வரவில்லை. மீனவர்களுடன் சேர்வதற்கே ராமேசுவரம் வந்துள்ளேன். மீனவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஊடகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தீர்கள். அதனால் அங்கு அவர்களிடம் பேசமுடியவில்லை. அப்துல்கலாம் எனக்கு மிகவும் முக்கியமானவர். அவருடைய வீட்டிற்கு சென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் அரசியல் எதுவும் இல்லை. அவருடைய உணர்வு, நாட்டுப்பற்று என்னை மிகவும் கவர்ந்தது.

என்னுடைய பாடத்தின் ஒருபகுதி அவருடைய வாழ்க்கை. அவர் படித்த பள்ளிக்கு செல்லவேண்டும் என்று நினைத்தேன். அதிலும் அரசியல் கிடையாது. ஆனால் தடை போட்டார்கள். அவர்களால் நான் பள்ளிக்குச் செல்வதைத் தான் தடை செய்யமுடியும், நான் பாடம் படிப்பதை தடுக்க முடியாது. அந்த பாடம் தொடரும். எனது படத்தில் வரும் தடைகளை வென்றே சரித்திரம் படைப்பேன்என்ற வரிகளை போல படிப்பேன்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், “நான் உங்களின் ரசிகன், உங்களை விரைவில் சந்திப்பேன், கொள்கைகளை பற்றி நீங்கள் கவலைப்படுவதைவிட, மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை பட்டியல் போடுங்கள், அதுவே உங்கள் கொள்கையாகிவிடும். இனிமேல் இப்படித்தான், இசங்கள் எல்லாம் சரியாக வராதுஎன்றார். எனது மனதில் இருப்பதை எல்லாம் அவர் பிரதிபலித்தார்.

அவர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். இசங்கள் என்றால் கம்யூனிசம் என்று சொல்லவில்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதை நாம் கொடுக்கவேண்டும். சினிமாவும், அரசியலும் மக்கள் தொடர்பான விஷயம் தான். ஆனால் சினிமாவைவிட பொறுப்பும், பெருமையும் அரசியலில் அதிகம்.

சினிமா என்பது ஒரு பண்டமாற்று முறை. என் திறமை, அது பணமாக கைமாறி இருக்கிறது. ஆனால் அரசியலில் எனது திறமை , பணம் அனைத்தும் உங்களுக்குத் தான். இதுவரை தமிழக ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்துவந்தேன். இனி அவர்களது இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன். அப்துல்கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காத நான் அரசியல் ஆதாயத்துக்காக தற்போது அவருடைய இல்லத்துக்கு வந்ததாக கூறுகிறீர்கள். நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது இல்லை. ஜனநாயக நாட்டில் குற்றங்கள் சுமத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இன்று நான் அரசியல் கட்சி அறிவிப்பதற்கு முக்கிய காரணம் பிப்ரவரி 21-ந்தேதி பன்னாட்டுத் தாய்மொழி நாள்.

50
ஆண்டுகளுக்குமுன் நான் பார்த்த ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதுபோதாது. உலகநாயகனாக நான் இங்கு வரவில்லை. நம்மவராகத் தான் வந்திருக்கிறேன். களப்பணி ஆற்றிவிட்டுத்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பது இல்லை. நல்ல எண்ணமும், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தாலே போதுமானது.

இவ்வாறு அவர் கூறி னார்.பின்னர் அவர், அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு, அப்துல்கலாம் சிலையையும், நினைவிடம் முழுவதையும் சுற்றிப்பார்த்த பின் ராமநாதபுரம் புறப்பட்டார். 


ெய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment