(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 22, 2018

துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைதீர் நிகழ்ச்சி!!

No comments :

துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி துபாய் இந்திய துணை தூதரகத்தில் ஓபன் ஹவுஸ்எனப்படும் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

இரண்டாவது குறை தீர்க்கும் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை 23.02.2018 நடக்க இருக்கிறது.இந்த கூட்டத்தில் தூதரக அதிகாரிகளை நேரடியாக சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள், சான்றிதழ் அட்டஸ்டேசன் கொடுத்தும் இன்னும் வராமல் இருப்பது, பாஸ்போர்ட் விண்ணப்பித்தும் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் புகார் மனுவாக கொடுக்கலாம்.

எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: முதுவை ஹிதாயத், துபாய்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment