(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 7, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களிலும் மார்ச் 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் மார்ச் 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் வட்டாரத்தில் ஆர்.எஸ்.மடை, ராமேசுவரத்தில் நடராஜபுரம், பரமக்குடியில் பொட்டிதட்டி, திருவாடானையில் கட்ட விளாகம், முதுகுளத்தூரில் எம்.கொட்டகுடி, கடலாடியில் வாலிநோக்கம், கமுதியில் ஏ.தரைக்குடி, கீழக்கரை அருகே உத்தரவை ஆகிய கிராமங்களில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.


இதில் பொது விநியோகத் திட்டம் சம்பந்தமான தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படவுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment