(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 25, 2018

குழந்தை தொழிலாளர் மீட்பு சேவை எண்-1098 விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

No comments :
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர் மீட்பு குறித்த விழிப்புணர்வு அவசர இலவச தொலைபேசி சேவை எண்-1098 வில்லைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் தலைமை வகித்தார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கலாவதி, சைல்டு-லைன் இயக்குநர்கள் கே. கருப்புச்சாமி, தேவராஜ், ஆட்டோ சங்கத் தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பி. மாணிக்கம், மகளிர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த 24 மணி நேரமும் செயல்படும் இலவச அவசர தொலைபேசி எண்-1098 வாசகம் பொறித்த வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டியும், பொதுமக்களிடம் வழங்கியும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.


இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் துறை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment