Thursday, March 1, 2018
ராமநாதபுரம் உள்பட நான்கு மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பூங்கா!!
ராமநாதபுரம் உள்பட நான்கு மாவட்டங்களில்
தலா 100 ஏக்கரில் சிட்கோ
தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், சக்கரக்கோட்டை ஊராட்சி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
அருகே 100 ஏக்கரில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில், 'ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா' அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வோர், மீன் எண்ணெய், மீன் உணவு, நண்டு, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட கடல் உணவு சார்ந்த தொழில்களை இங்கு துவக்கலாம்.
ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாய் நிலத்திற்கான தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல், கரூர் பாஞ்சாலங்குறிச்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரையில் ஒருங்கிணைந்த
தொழில்நுட்ப ஜவுளி பூங்கா, தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடியில்
ஒருங்கிணைந்த உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment