(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 11, 2018

ராமநாதபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிராக போராட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் நீராதாரங்கள் விஷமாக மாறி வருவதாகவும், எனவே அந்நிறுவனத்தை மூட வலியுறுத்தியும் கிராம மக்கள் இடியேறும் போராட்டத்தை சனிக்கி நடத்தினர்.

பனைக்குளத்தில் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் ரசாயனம் கலந்த நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு இக்கிராமத்தில் வசிக்கும் பலரும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ருப்பதாகம், எனவே அந் நிறுவத்தை முட வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினர்.அப்போது, அந்த தனியார் குடிநீர் சத்திகரிப்பு நிறுவனம் இருக்கும் இடத்தை நோக்கி அவர்கள் புறப்பட்டனர். காவல்துறையினர் வழிமறித்து தடுத்து நிறுத்தியதையடுத்து கடற்கரைச் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி.எஸ்.வெள்ளத்துரை.டி.எஸ்.பி.க்கள் எஸ்.நடராஜ், பிரவீன்.உடோங்ரே, சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், துணை வட்டாட்சியர் முருகவேல், கிராம நிர்வாக அலுவலர் பூபதி ஆகியோர் வந்தனர்.

பின்னர் காலல்து றை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கினங்: குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை விரைவில் மூடவில்லையெனில் வரும் சனிக்கிழமை அடுத்த கட்டமாக மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி வது என முடிவு செய்து அனைவரும் கலைந்து சென்றனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment