(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 18, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம்!!

2 comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பரமக்குடி நத்தம் நிலவரி திட்டம் தனி தாசில்தார் அமலோற்பவ ஜெயராணி பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த முத்து லெட்சுமி கடலாடி தாசில்தராகவும்அந்த இடத்தில் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி கீழக்கரை தாசில்தாராகவும்அங்கு பணியாற்றி வந்த கணேசன் திருவாடானை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.

திருவாடானையில் பணியாற்றி வந்த காளிமுத்தன் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தனிதாசில்தாராகவும்பரமசிவன் பரமக்குடி தாசில்தாராகவும்அங்கு பணியாற்றி வந்த ஜெயமணி பரமக்குடி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும்சுகுமாறன் ராமநாதபுரம் டாஸ்மாக் சில்லறை விற்பனை உதவி மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் சிக்கந்தர் பபிதா பரமக்குடி நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் லெட்சுமணன் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், உப்பூர் அனல்மின் நிலைய முன்னாள் தனி தாசில்தார் மீனாட்சி முதுகுளத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய கோபால் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அந்த இடத்தில் பணியாற்றிய சிவகுமார் ராமநாதபுரம் தாசில்தாராகவும், ராமநாதபுரம் தாசில்தாராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் கலெக்டர் அலுவலக பொது மேலாளராகவும், நித்தியானந்தம் மாவட்ட வழங்கல் அலுவலக நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் கலைமதி புதிதாக தோற்று விக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் செல்வராஜ் பரமக்குடி நில எடுப்பு தனி தாசில்தாராகவும், ராமநாதபும் நில எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் சந்திரன் ராமேசுவரம் தாசில்தாராகவும், ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் காமாட்சி ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளர் சுரேஷ்குமார் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், முதுகுளத்தூர் மண்டல துணை தாசில்தார் மரகதமேரி முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தனித்துணை தாசில்தார் பாலசரவணன் உப்பூர் அனல்மின் நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த கல்யாண குமார் ராமநாதபுரம் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், திருவாடானை மண்டல துணை தாசில்தார் சாந்தி ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

2 comments :

Unknown said...

*ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் முறைகேடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா*

*தெருவிளக்கு அமைக்காமலேயே விளக்குகள் மாட்டப்பட்டதாக கூறி முறைகேடாக பண மோசடி செய்துள்ளார் கிளார்க் அஜ்மல்கான்*

*விளக்குகள் இல்லாத கிராமங்களான 1, வெட்டன் மனை 2. காட்டுப்பள்ளி 3 சேர்மன் தெரு 4, முத்தரையர் நகர் 5. ஏறா ந் துறை 6. பொன் நகர் 7. தொத்த மகன்வாடி 8. நாச்சம்மை புரம் 9. சின்ன ஏர்வாடி 10. சடை முனியன்வலசை 11. மெய்ய வலசை 12,பிச்சை முப்பன்வலசை 13. SK நகர் 14, ஆதஞ்சேரி ஆகிய பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க வில்லை மேலும், நாச்சம்மை புரம் கிராமத்தில் பல முறை புகார் அளித்தும் தெருவிளக்கு அமைக்க வில்லை 6 மாதங்களுக்கு முன்பு வீட்டு மனைக்கு ரோடு போட செம்மண் சாலை அமைத்தனர். ஏறாந்துறை To நாச்சம்மை புரம் வழி அதையும் ஊராட்சி செயலர் அஜ்மல்கான் அரசு நிதியில் இருந்து 2.50 லட்சம் பணத்தை பஞ்சாயத்து சாலை அமைத்தது போல் கணக்கு காட்டியுள்ளார். இது போல் பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும், அடி பம்பு அமைத்தது போலவும் 17 ஆயிரம் மோசடி செய்ததற்கான ஆதாரங்களும் உள்ளது.*
*மேலும் பிரதமமந்திரி தனிநபர் கழிப்பறை திட்டத்திற்கு கழிப்பிடம் கட்டவதற்காக முறையான அரசு அனுமதி பெறாமல் மணல் திருட்டில் ஈடுபட்டதாகவும் ஊராட்சி செயலர் அஜ்மல்கான் மீது அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.*

*எனவே மாவட்ட ஆட்சியர் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.*

Muhavai Murasu said...

OMG

Post a Comment