(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 25, 2018

அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி!!

No comments :
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பேக்கரும்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளது. இங்கு, தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்லுகின்றனர். இங்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேக்கரும்பு பேருந்து நிறுத்மம் அருகே 4 கழிப்பறைகள் கட்டப்பட்டன.


ஆனால், தற்போது இந்த கழிப்பறைகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டப்பட்டுள்ளன. இதனால், கலாம் தேசிய நினைவிடத்துக்கு வரும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.


எனவே, இந்த கழிப்பறைகளை முறையாகப் பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவேண்டும் என்பதுடன், இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதால் கூடுதலாக சில கழிப்பறைகளும் கட்டப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment